முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் முன்னாள் அதிபருக்கு பணிநயப்பு விழா

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை ஜெயவீரசிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பணிநயப்பு விழா நேற்றையதினம் (21.04.2026) பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் 2016.01.14 முதல் 2025.06.12 வரை அதிபராக பணியாற்றிய அவர் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்விழா பாடசாலை அதிபர் ஜெ. அன்ரனி டொன்பொஸ்கோவின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் இடமாற்றம் செய்யப்பட்டு சென்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முன்னாள் அதிபரின் சேவைகளைப் பாராட்டினர்.

விழாவின் போது அவரின் கல்விசார் பங்களிப்புகள் மற்றும் பாடசாலை வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் நினைவுகூரப்பட்டதுடன், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்.

Latest news

Related news