எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது.
இதன்பின் கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என தொடர்ந்து பல படங்கள் வெளியாகவுள்ளது. இவை மட்டுமின்றி பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறாராம்.
ஆனால், இதுவரை அது யாருடைய படம் என தெரியவில்லை. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
திருமணம் எப்போது
54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல முறை எஸ்.ஜே. சூர்யா குறித்து காதல் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து எஸ்.ஜே. சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்பது போல் மழுப்பி பதில் ஒன்றை கூறியுள்ளார். சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள் தான் முக்கியம் என்பது போல் கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.