ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய தேரரிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய சுமங்கள தேரரிற்கும் இடையில் இன்றைய தினம் (19.06)விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் சாந்திகுமார் நிரோஸ்குமார் இன்றையதினம் கண்டியில் வணக்கத்துக்குரிய திவட்டுவவே சிறிசித்தார்த்த சுமங்கள தேரரிற்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தில் தற்போது காணப்படும் இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், இன நல்லிணக்கம் தொடர்பாகவும், நடக்கின்ற ஊழல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும் , பாரபட்சமின்றி சேவைகள் மக்களுக்கு சென்றடைவது தொடர்பாகவும் வன்னி வன்னிபிராந்தியத்தின், அபிவிருத்தி தொடர்பான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தேரர் சாதகமான கருத்துக்களை வழங்கியிருந்ததாகவும் இதன் போது பிரச்சினைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டதாக சாந்திகுமார் நிரோஸ்குமார் தெரிவித்திருந்தார்.

Latest news

Related news