பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உக்ரைன் பெருமளவு படை வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி போலிஷ்சக் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைன் படைகள் பெரியளவில் போரில் ஈடுபட தொடங்கின.

இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷ்யா அனுப்ப முடிவு செய்தது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளின் முதல் பொதியை பெலாரஸ் நாட்டுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா மீண்டும் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து கூடுதல் படைகள் பெலாரசில் குவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மீது நடைபெறும் படையெடுப்பை மற்றும் ஊடுருவல் குழுக்களை தடுக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Latest news

Related news