பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை

 

பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டு வகையான மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை,தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்த மருந்து பொருட்கள் நாட்டில் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கயைம, மருந்து தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த மருந்துப்பொருட்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

 

 

Latest news

Related news