வங்கிகளில் மக்களின் வைப்புத் தொகைக்கு ஆபத்தா – வெளியான தகவல்

வங்கிகளிலுள்ள மக்களின் வைப்புத் தொகையில் கைவைக்கும் திறன் எவருக்கும் இல்லை என அதிபரின் ஆலோசகர் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவாக கூறியுள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை வழங்குவது தொடர்பில் நாட்டில் தேவையற்ற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளடக்கப்படக் கூடாது எனவும் அனைத்தும் மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

Latest news

Related news