இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் போட்டி இரண்டு சர்வதேச மைதானங்களில் இடம்பெறவுள்ளன. இதன்படி ஆர். பிரேமதாச மைதானம் தவிர கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் போட்டிகள் நடைபெறும்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இம்முறை முதல் தடவையாக ஏலத்தின் மூலம் அணிகளுக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குழாத்திலும் அதிகபட்சம் ஆறு சர்வதேச வீரர்களை உள்ளடக்க முடியும்.
ஆரம்பதில் ரவுன்ட் ரொபின் அடிப்படையில் ஐந்து அணிகளும் இரு முறை மற்ற அணியுடன் மோதவுள்ளன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும்.
தொடரின் இறுதிப் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது