முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பூர்வீக காணிகள் பறிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அதற்கான தீர்வுகளை எட்டும் முகமாக கலந்துரையாடல் இன்று (16) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரதிநிதி இளங்கோவன் , பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன் (காணி), வனவளத்திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Latest news

Related news