சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக இன்று (26) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க கோரியதான விழிப்புணர்வு பேரணியானது
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபவனியாக சென்று தண்ணிரூற்று பொதுச்சந்தைக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யாதீர், சிறுவர் துஷ்பிரயோகத்தை கண்டால் 1929 க்கு அழைப்போம், மேதையை அழிக்கும் போதை, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவோம் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம், சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ள பாதுகாப்பு மிக்க சூழல் ஒன்றை உருவாக்குவோம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது .
மிஸ்வா திருச்சபையின் ஊடாக இடம்பெற்ற குறித்த பேரணியில் திருச்சபையின் ஊழியர்கள் பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.