ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் முல்லைத்தீவுக்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்றையதினம் (27) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்தில் சென்று அங்கு மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டதோடு அதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரன் ஆலயத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டதோடு இறுதியாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி, உதவி அமைப்பாளர் எஸ். சத்தியசுதர்சன், வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சனி போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news