தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் A.கவியாழின் 1ம் இடத்தையும், A.M.பவ்ளா ரெஜினா 2ம் இடத்தையும், R.தரணியா 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் வழிப்படுத்திய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான திருமதி J.D.ரெஜினோல்ட் பெரேரா மற்றும் திருமதி அ.சகிதரன் ஆகியோரின் வழிப்படுத்தலில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி செபமாலை , பிரதி அதிபர் சின்னராசா சிறிரங்கநாதன் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றனர்