தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும் , பா.கிசாளினி 3ம் இடத்தையும் , பா.மதுசாளினி 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ஞா.ஜீவன் பயிற்றுவிப்பாளராகவும், பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கி.அம்பிகா இவர்களின் வெற்றிக்கு வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை சமூகம் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றது.