தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு இன்றையதினம் (3) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்பாடானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்காகவும் நல்லிண தென்னக்கன்றுகள்
தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு 1800 தென்னம்பிள்ளைகள் தேவைப்பாட்டின் அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 100 தென்னம்பிள்ளைகள் வழங்கியதனை தொடர்ந்து குறித்த நபரின் காணியில் தென்னம்பிள்ளைகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் ஆனந்தபுரம் , இரணைப்பாலை போன்ற இடங்களுக்கு சென்றும் தென்னம்பிள்ளைகள் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, 68 ஆவது பிரிவினைடைய இராணுவ கட்டளை தளபதி, 682 ஆவது இராணுவ பிரிவினுடைய கட்டளை அதிகாரி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந், சிலாபம் தென்னை பயிர்ச்செய்கை சபையினுடைய அதிகாரிகள், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பிரதி அதிபர், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தென்னம்பிள்ளைகளை வழங்கி வைத்திருந்தனர்.