யுத்தத்தின் போது அழிவடைந்த நிலையில் இருந்த விநாயகர் ஆலயமானது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகம்.(வீடியோ)

யுத்தத்தின் போது அழிவடைந்த நிலையில் இருந்த ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயத்தின் கும்பாபிஷேகமானது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நேற்றையதினம் ஆரம்பமாகியிருந்தது.

யுத்தத்தின் போது அழிவடைந்திருந்த தேவிபுரம் ஆ பகுதி ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயமானது ஆலய பரிபாலனசபையினர், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு விநாயகர் விஞ்ஞாபன நிகழ்வானது நேற்றையதினம் (03.09) இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.

குறித்த விஞ்ஞாபனமானது நேற்று (3) இரவு கிரியைகளை தொடர்ந்து இரவு 10 மணி தொடக்கம் இன்று (4) காலை 10 மணிவரை எண்ணெய்க்காப்பு வைபவம் இடம்பெற்று பிரதம குருக்களான கௌரி சங்கரசர்மா (வவுனியா) அவரின் தலைமையில் கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது.

குறித்த கும்பாபிஷேகத்தில் 68 வது படை பிரிவின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் கஸ்தூரி முதலிகே, 682 பிரிக்கேட் கொமாண்டர் கேணல் ரொஹான், 3 ஆவது காலாட்படை படைப்பிரிவின் அதிகாரி ஆர்.எம்.ஆர். ரணவீர மற்றும் இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் கிராம மக்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news