அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் பெரிய கோமரசங்குளம் மாணவிகள் சாதனை

பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் வ/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

இப் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இப் போட்டியில் பங்குபற்றி பி.மேரி அசெம்ரா (under 20) 55kg எடை பிரிவில் 77kg எடை தூக்கி 3ம் இடத்தை 🥉 பெற்று சாதனை படைத்துள்ளார். பா.கிசாளனி (under 20)49kg எடை பிரிவில் 65kg எடை தூக்கி 6ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர்களிற்கு பொறுப்பாசிரியராக திருமதி கி. அம்பிகா மற்றும் பாடசாலை அதிபர் S. Varatharajah அவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்த ஞா.ஜுவன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றனர்.

Latest news

Related news