முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் உயர்நீதிமன்றம் முன்பாக போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் கொழும்பு உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது
நாளையதினம் திங்கள் கிழமை (09.10.2023) காலை 09:30 மணிக்கு கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் குறித்த போராட்டம் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்படவுள்ளது
முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் இந்த மாபெரும் கண்டனப் போராட்டம் நடாத்தப்பட இருக்கின்றது.
வடக்குக் கிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.