தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை : நன்றி தெரிவித்து ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் தீர்மானம்

பத்திரிக்கையாளர்களின் நலன் பேணும் வகையில்  தமிழ்நாட்டு அரசுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் டெல்டா மண்டல கூட்டமானது  தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் ஏ.தேவா, அமைப்பின் மாநில இணைச்செயலாளர் ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் நலன் பேணும் தமிழ்நாடு அரசுக்கு நன்றிதெரிவித்து கொள்வது உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களின் தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறித்த கூட்டத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் லீலா லோகநாதன், குழலி குமரேசன் , சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் சி.பி.ராஜன், டாக்டர் சிவராமன், டாக்டர் எம்.பெருமாள், டாக்டர் ஏ.சேகர் , மாநில செய்தி தொடர்பாளர் அம்ஜத் இப்ராஹீம், மாவட்ட தலைவர் ஜெயராமன், நேசக்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபால், மாவட்ட செயலாளர் தாமரை செல்வன், ஆக்ஸ்போர்ட் பள்ளி தாளாளர் ராஜ்குமார், பத்திரிக்கையாளர் கீழை அ.கதிர்வேல் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. செய்தி தொடர்பாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் வாரை.எஸ்.பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா.சங்கர் , ரயில் பாஸ்கர்,புலிவலம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மக்கள் கார்த்தி , பத்திரிக்கையாளர்கள் தினமலர் ஜெயபால் , தஞ்சை தரணியன், முத்துப்பேட்டை மாறன் மற்றும் திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் திருவாரூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடைபெற்றதோடு, தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாவட்ட அமைப்பாளர் கே.வி.ஆனந்தின் நன்றி உரையோடு நிறைவு பெற்றிருந்தது.

Latest news

Related news