யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஆதிவாசிகள்.

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை பயணம் செய்யவுள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு (21, 22.10.2023) ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news