முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும் , நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.
அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் உணவகங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொதுசந்தை முழுமையாக முடங்கிய நிலையில் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்