கொக்குதொடுவாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு (Video).

முல்லைத்தீவு , கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) பிற்பகல் 2.30 மணியளவில் கொக்குதொடுவாய் சமூக அமைப்புக்கள், கொக்குத்தொடுவாய் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த இரண்டு மாவீரர்களின் பெற்றோரான கணபதிப்பிள்ளை பாலசிவராசாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest news

Related news