மாவீரர் நாளை நினைவு கூருவதனை தடைசெய்யும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடை உத்தரவு கோரி இன்றையதினம் மாலை வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் மாவீரர்களை நினைவு கூருவதற்குரிய ஏற்பாடுகள் தமிழர் தாயக பிரதேசமெங்கும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நினைவேந்தல் செய்வதை தடைவிதிக்க கோரி பொலிஸாரால் போடப்பட்ட தடையுத்தரவு மறுக்கப்பட்ட நிலையில் இவ்வளவு காலம் அமைதியாக செயற்பட்ட முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று மாலை தடை உத்தரவு கோரி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் இன்றையதினம் முடிவடைந்து சட்டத்தரணிகள் யாரும் அற்ற நிலையில் நினைவேந்தலை எவ்வாறாயினும் தடைசெய்து விட வேண்டும் எனும் நோக்கில் பொலிஸார் இவ்வாறான முனைப்பினை காட்டி வருகின்றனர்.