மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் கதவடைப்பு

தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்று (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள இருக்கின்றனர் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.

அதன்படி இன்றையதினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Latest news

Related news