முல்லைத்தீவில் முதுபெரும் கலைஞர் இயற்கை எய்தினார்

முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த தவில் வித்துவான் இன்றையதினம் இயற்கை எய்தியுள்ளார்.

முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரின் இறுதியாத்திரை நாளை (30.11.2023) காலை 10 மணியளவில் அன்னாரின் முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news