முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – பரந்தன் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (07.12.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த பட்டாரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 மதிக்கத்தக்க இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குள் புகுந்து கடும் சேதத்திற்குள்ளாகியது.
குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.