பிக்பாஸ் சீசன்7 பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் சீசன் செவனின் பினாலேயும் நெருங்கி கொண்டு வருகின்றது.
இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும் நடக்கிறது. அப்படி அனன்யா கடைசியாக வெளியேறி வார இறுதி எலிமினேஷனில் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.
தன்னை வெளியே அனுப்புங்கள் என கேட்டுக் கொண்டிருந்த கூல்சுரேஷ் ஒரு கட்டத்தில் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனாலேயே பிக்பாஸ் கூல் சுரேஷை இந்த வாரம் எவிக்ட் செய்ததாக கூறப்படுகிறது. அக்டோபர் 1 முதல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் 10 வாரங்கள் வீட்டில் அதாவது 75 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார்.
இவர் வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றவர் ரூ. 15 லட்சம் வரை சம்பளம் பெறுவார் என பேசப்பட்டுவருகின்றது.