புதுக்குடியிருப்பில் 25 இலட்சம் அதிஸ்டம்

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிளிநொச்சியினை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அதிஸ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Latest news

Related news