முள்ளியவளையில் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ பரவியுள்ளது

இன்று (10.01.2024) அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்

இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது

பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு குறித்த தீ ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளையும் மேலதிக விசாரணைகளையும் முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news