தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் 

கல்வியால் முல்லையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்ப்பாட்டில் தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
2024 ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் நாம் “ஊர் ஒன்று படுவோம்” எனும்  தொனிப் பொருளிலே இன்று (14) காலை 7.30 மணிமுதல் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில்  விளையாட்டு போட்டிகள்ஆரம்பமாகி இடம் பெற்றுவருகிறது
நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்ப்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளியவளை வடக்கு, முள்ளியவளை தெற்கு,முள்ளியவளை கிழக்கு,முள்ளியவளை மேற்கு, முள்ளியவளை மத்தி, புதரிகுடா ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கிடையில் கயிறு இழுத்தல், கிளித்தட்டு, தலகணை சண்டை, முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகுபின்னுதல், மோட்டார் சைக்கிள் மெதுவாக ஓடுதல், வினோத உடை, கிறிஸ்மரம்ஏறுதல் என பல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் மாலை வேளையில் வயது முதிர்ந்த காலத்திலும் தடகள போட்டியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அகிலத்திருநாயகி அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது

Latest news

Related news