தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து முரண்பாடுகள் தான் இந்த குழப்ப நிலைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) இடம்பெற்று வருகின்றது. திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 336பேருக்கு அதிகமானவர்கள் வாக்களிக்க முடியும்.
இதுவரையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வந்த தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு முதன்முறையாக தேர்தர் அடிப்படையில் முடிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.