24 மணித்தியாலயத்தில் 930 பேர் கைது, தகவல் வழங்கினால் ரொக்கப்பரிசு

நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்தகைய தகவல்களை வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (24) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 930 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news