முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கபடி சுற்றுப்போட்டி

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன் புலம்பெயர் கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதி அனுசரணை பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையிலான பகல் இரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற மாபெரும் ஆண்/பெண் கபடி சுற்றுப்போட்டிகள் 10,11.2.2024 கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெற்றிருந்தது.

ஆண்கள் 1ம் இடம் முத்தமிழன் விளையாட்டு கழகம் 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகம். பெண்கள் 1ம் இடம் பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகம், 2ம் இடம் முத்தமிழன் விளையாட்டுக் கழகம். வெற்றிபெற்ற கழகத்தினருக்கும் வீர வீராங்கனைகளுக்கும் வெற்றிக் கேடயங்களும் பண பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த போட்டியில் விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகத்தினர், வீர, வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news