திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று (03.03.2024) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் குருபூசை தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
அறநெறி பாடசாலை மாணவர்களது நடனத்துடன் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையடிக்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் க.முத்துலிங்கம் தலைமையில் முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்வுகள் பாடசாலை, அறநெறி மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி திரு திருமதி ரவீந்திரகுமாரன் சிறப்பு விருந்தினர்களாக கந்தசாமி ஆலய தலைவர் த.கோபாலசிங்கம், முத்துமாரியம்மன் ஆலய தலைவர் க.ஜெனமேஜந், உலகளந்த பிள்ளையார் ஆலய தலைவர் மு.பார்த்தீபன், முத்துமாரியம்மன் ஆலய செயலாளர் இ.ரவீந்திரராசா, தொட்டியடி சித்திவிநாயகர் ஆலய தலைவர் ப.செந்தூர்வாசன் கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன், வர்த்தக நிலைய உரிமையாளர் பி.ஆறுமுகம் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.