வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தி்ல் நேற்றயதினம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகம் உட்பட ஊர்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றயதினம் பொலிஸாரின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியில் சிவராத்திரி தின வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிலையில் மாலை 7 மணிக்கு பின்னர் வழிபாட்டில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் பலப்பிரயோகத்தினை முன்னெடுத்ததுடன், ஆலயத்தின் செயலாளர், பூசாரி உட்பட 8 பேரை கைதுசெய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாலை வவுனியா நீதவானிடம் முன்னிலைபடுத்தப்பட்டனர். இதன்போது பொலிசாரின் விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால் கைதுசெய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை கைதுசெய்யப்படும் போது தாம் பொலிசாரால் தாக்குதலுக்கு இலக்கானதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த 8 பேரையும் சட்டவைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த வழக்கில் ஆலயம் சார்பாக சிரேஸ்டசட்டத்தரணி தி.திருஅருள் மற்றும், சுகாஸ், திலீப்காந், ஆகியோர் முன்னிலையாகிருந்தமையும் குறிப்பிடதக்கது.