2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்திற்கு பிறகும் பாடசாலையில் கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என்றார்.அதன்படி, மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை,  ஆனால் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். பின்னர், அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார் .

Latest news

Related news