ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் போது அவரின் பிரிவை தாங்காது கண்ணீரால் வழியனுப்பி வைத்த காணொளி வெளியாகியுள்ளது.