மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார்.
ஒருவர் மட்டும் தமிழர்
2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேல் நீதிமன்ற நீதிபதியாக எட்டுப் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் மட்டும் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.