- வவுனியா தவசிகுளத்தில் புலம்பெயர் உறவின் நிதி உதவியில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு முன்னாள் போராளி குடும்பத்தின் பாவனைக்காக இன்று (26.04.2024) கையளிக்கப்பட்டது.
ஜேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் ஜேர்மன் சொப்ட் அமைப்பின் ஊடாக ஜேர்மன் வாழ் தமிழுறவு உதயசாந் அவர்களின் 30 வது பிறந்தநாளை முன்னிட்டு குறித்த குடிநீர் குழாய் கிணறு அமைக்கப்பட்டு உறவுகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளின் நிதி அனுசரணை செயலணியின் மாவட்ட செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன், கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர், பதிப்பாளர் உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.