இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் பிள்ளையான். குற்றம் சுமத்தும் ஜெயா சரவணா

இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையான் செயற்படுவதாக அம்மான் படையணியின் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவருமான ஜெயா சரவணா குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரால் இன்று (25.06.2024) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்து செல்லத்தான் நினைக்கிறோம் ஆனால்.
அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை! தற்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் அடாவடிகளும் அடக்கு முறைகளும் தொடர்ந்தவாறே காணப்படுகிறது.
அதாவது தமிழர்களின் பூர்வீக வாழ்விட நிலங்களில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடு அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் பயங்கர வாதிகளின் அடாவடி தொடர்ந்தவாறே அங்கு காணக்கூடியதாக உள்ளது.
அண்மையில் நடந்த கீழ்த்தரமான சம்பவம் ஒன்று வீரமுனை வளைவு கோபுர விவகாரத்தை கூறலாம்.
இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் வியாபார முகமூடி போட்டு கொண்ட முஸ்லிம் பயங்கரவாதிகளே ஆவர்.
இவர்களுக்கு பின்னணியில் இரட்டை வேடம் போட்டு கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு கதை முஸ்லிம் பயங்கரவாத கும்பலுக்கு ஒரு கதை கூறி கொண்டு அவ் பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக எமது தமிழ் மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சுரண்டி உறுதுணையாக இருப்பவர் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் அவர்கள் என்பதே இங்கு தெள்ள தெளிவாக வெளிப்படுகிறது. தற்போது இவரின் செயற்பாடுகள் அனைத்துமோ சீனாவின் தந்துரபாய நகர்த்தல்கள் என்பதும் எமக்கும் எமது நாட்டுக்கும் புரிகிறது.
இதனால் எமது நாட்டுக்குள் ஒரு இன முறுகலை ஏற்படுத்தும் என்பதே எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

Related news