முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று(10.07.2024) காலை நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.