வடமாகாண கல்வி திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் யூலை மாதம் 21, 22 ஆம் திகதிகளில் கராத்தே சுற்றுப்போட்டியானது வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது. இதில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
ரூபி காட்டாவில் 1ம் இடத்தினையும், குமித்தேயில் 1ம் இடத்தினையும், குழு காட்டாவில் 1ம் இடத்தினையும், குழு குமித்தேயில் 3ம் இடத்தினையும் பற்றீசியா தனி காட்டாவில் 3ம் இடத்தினையும், குழு காட்டாவில் 1ம் இடத்தினையும், குழு குமித்தேயில் 3ம் இடத்தினையும், பிரவீனா குழு காட்டாவில் 1ம் இடத்தினையும் சட்சினி பிரியங்கனி குழு குமித்தேயில் 3ம் இடத்தினையும், திலக்சிகா தனி காட்டாவில் 3ம் இடத்தினையும், தனி குமித்தேயில் 2ம் இடத்தினையும், பௌலா றெஜீனா தனி காட்டாவில் 1ம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வாறு மாணவிகள் வடமாகாணத்தில் உயர்ந்த நிலையில் வெற்றிகளை பெற்று சாதனைகளை படைக்க பயிற்றுவிப்பாளர் சி.எல். மார்சல் சென்சி மற்றும் பொறுப்பாசிரியர் நடோஜினி ஆகியோரின் தியாகமும் உழைப்பும் இன்றியமையாததாகும்