உதைபந்தாட்ட சம்மேளனம் , அங்கத்துவ கழகங்கள் பங்குபற்றும் பூநகரி லீக் கிண்ணம்_2024 உதைபந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (14.09.2024) பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் கிருபா பிறவைற் லிமிட்டற் நிதி அனுசரணையுடன் மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இடம்பெற்றிருந்தது.
பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் வலைப்பாடு மெசியா, வலைப்பாடு ஜெகமீட்பர் அணியினர் மோதிக்கொண்டனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் சமநிலை தவிர்ப்பிற்காக சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டு 04:03 என்ற கோல்கள் கணக்கில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணி வெற்றிபெற்று பூநகரி லீக் கிண்ணம் 2024 Champion ஆகியிருந்தது.
குறித்த உதைபந்தாட்ட நிகழ்வில் பிரதமவிருந்தினராக மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டெவின்சன் ( ஜெரால்ட்) ,மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.