2024/2025 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளிகல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான தொடக்கவிழா நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை , கலைப்பீடத்துடன் இணைந்து நடாத்தும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2024/2025 அங்குரார்ப்பணமும் திசைமுகப்படுத்தல் நிகழ்வும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றையதினம் (15.09.2024) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வின் அமர்வில் வரவேற்புரை, துறைத்தலைவர் உரை, பணிப்பாளர் உரை, கலைப்பீடாதிபதி உரை, முன் கல்வி பணிப்பாளர் உரை, கல்வி அபிவிருத்திக்குழுமம், காப்பாளர் உரையை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமத்தின் நிதி அனுசரணையில் புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும், திசைமுகப்படுத்தல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
கல்வியற்துறை விரிவுரையாளர் கலாநிதி விஜயபாஸ்கரனின் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக , துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராசா ,யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக்கழக திறந்த தொலைக்கல்வி நிலைய பேராசிரியர் ஜெ.றொயின்சன், கல்வியற்துறை தலைவர் ஆ.நித்திலவர்மன், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கு.பிரதீபன், கல்வி அபிவிருத்தி குழுமத்தின் தலைவர் பொறியியலாளர் ம.சூரி, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய பிரதிப்பணிப்பாளர் கலாநிதி ஏ.சரவணபவன், முன்பள்ளிக்கல்வி , மாகாணகல்வி திணைக்களம், வடக்கு மாகாணம் த.முகுந்தன், கல்வி அபிவிருத்திக்குழுமம் ந.சச்சிதானந்தன், ம.சூரி, முன்பள்ளிக்கல்வி டிப்ளோமா கற்கைநெறி ,திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய இணைப்பாளர் கு.பிரதீபன் ,முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
p