திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பில்

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2024) புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அஞ்சலி திகழ்வில் தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து உரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது..

Latest news

Related news