புதுக்குடியிருப்பில் உணவகங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு.(Video )

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது இன்றையதினம் (02.09.2024) திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சில உணவகங்களில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. அதனையடுத்து அக்கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதுடன், இரண்டு உணவகங்கள் மூடி கடைகளினுடைய சிறு சிறு வேலைகளை மேற்கொண்ட பின்னர் கடைகளை திறந்து நடாத்த முடியும் எனவும் உணவக உரிமையாளர்களுக்கு கூறப்பட்டிருந்தது.

உணவக சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் தலைமையில் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news