ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

முள்ளியவளை பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ள போதும் அதி விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக  எரிந்து நாசமாகியுள்ளது.
முள்ளியவளை வித்தியானந்தா பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் குறித்த பாடசாலை உயர்தர மாணவன் ஒருவருக்கும் முரண்பாடு இருந்து குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் குறித்த மாணவனை பாடசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Latest news

Related news