முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி (video).

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி இரண்டாவது நாளான இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து  அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது
கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்று (08.10.2024) மாலை முன்னெடுக்கப்பட்டு இருந்தது. பின்னர் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் தண்ணீர் அதிக வரத்து ஏற்பட்டமையால்  இடைநிறுத்தப்பட்டு  இன்றையதினம்  காலை மீளவும் தண்ணீர்  அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11 இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையிலும் எதுவும் கிடைக்காமல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news