வடமாகாண வூசூ போட்டியில் 7 தங்க பதக்கங்களை பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் அணி முதலிடம்

முல்லைத்தீவில் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.10.2024) வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

2024 ம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இடையேயான வூசூ போட்டி முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் தேசிய வூசூ பயிற்சியாளர்களின் இரு நாள் பயிற்சியுடன் ஞாயிற்றுகிழமை முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் தங்கம் 5, வெள்ளி4, வெண்கலம்4, வவுனியா தங்கம் 1, வெண்கலம் 1, யாழ்ப்பாணம் வெள்ளி1,மன்னார் வெண்கலம் 1,பெண்கள் முல்லைத்தீவு மாவட்டம் தங்கம்2, வெள்ளி2, வெண்கலம்2 பெற்று முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சார்பாக உடையார்கட்டு, வள்ளிபுனம், கைவேலி, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, செல்வபுரம் உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, சிலாவத்தை, , தண்ணீரூற்று, முள்ளியவளை, வற்றாப்பளை, ஒட்டுசுட்டான், தண்டுவான், பாண்டியன்குளம், ஆகிய பிரதேசங்களில் இருந்து வீர வீராங்கனைகள் ஒன்றிணைந்து பங்கு கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ் வெற்றிக்கு பங்காற்றினார்.

இந் நிகழ்வின் இலங்கை வூசூ சங்க தலைவர் வடமாகாண விளையாட்டு திணைக்கள தலைமைப்பீட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Latest news

Related news