குத்துச்சண்டை போட்டியில் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் பதக்கத்தை பெற்று கொடுத்த மாணவன்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டியில், வெண்கல பதக்கம் பெற்று மாணவன் ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த 31.10.2024 தொடக்கம் 05.11.2024 திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டி இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவன் சத்தியராசா யதுர்சன் 20 வயது பிரிவினருக்கான 60.64 Kg எடை பிரிவில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர் குருபரன் நிதீஸ் அவர்களின் பயிற்றுவிப்பில் பதக்கம் பெற்ற மாணவனை பாடசாலை, சமூகத்தினர் பாராட்டுவதோடு ,இவ் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் தேசிய பதக்கத்தை கொண்டு வந்த மாணவர் என்ற பெருமையையும் சேர்த்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news