நள்ளிரவில் காதலியை மிரட்டி கடத்த முயற்சித்த காதலன் கைது

வலஸ்முல்ல – வத்தேஹேன்கொட பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் நள்ளிரவில் தனது காதலியை கடத்த முயற்சித்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் வலஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதியுடன் சுமார் ஒரு வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், பின்னர் குறித்த யுவதி அந்த உறவை நிறுத்தியுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதன் காரணமாக ஆத்திரமடைந்த காதலன் கத்தி, ஏராளமான துப்பாக்கி குண்டுகளுடன் யுவதியின் வீட்டிற்கு வந்து அவரை கடத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது யுவதியின் உறவினர்கள் உடனடியாக இது தொடர்பாக 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு முறைப்பாடு செய்த நிலையில், வலஸ்முல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேநகநபரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news