கொழும்பு,தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தேசிய வைத்தியசாலையில்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.